வாய்க்காலில் அழுகிய நிலையில் மிதந்த பெண் உடல்

மடத்துக்குளம் அருகே வாய்க்காலில் அழுகிய நிலையில் மிதந்த பெண் உடல் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2022-11-18 18:05 GMT


மடத்துக்குளம் அருகே வாய்க்காலில் அழுகிய நிலையில் மிதந்த பெண் உடல் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாய்க்காலில் பெண் பிணம்

மடத்துக்குளத்தை அடுத்த சோழமாதேவி வாய்க்காலில் நேற்று அழுகிய நிலையில் பெண் பிணம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பொதுமக்களின் உதவியுடன் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பெண்ணுக்கு சுமார் 60 வயது இருக்கும். உடல் முழுவதும் அழுகி முகம் சிதைந்திருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அந்த பெண் இறந்து சுமார் ஒரு வாரம் ஆகியிருக்கும் என்று கருதப்படுகிறது.

கொலையா? போலீ்ஸ் விசாரணை

எனவே அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் சமீபத்தில் காணாமல் போன பெண்கள் யாரும் உள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாய்க்காலில் பெண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்