தூக்குப்போட்டு பெண் தற்கொலை

பட்டுக்கோட்டையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2023-02-08 19:41 GMT

பட்டுக்கோட்டையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூக்குப்போட்டுக் கொண்ட பெண்

பட்டுக்கோட்டை நகரில் உள்ள பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குப்பம்பெருமாள். இவருடைய மகள் சிவரஞ்சனி (வயது29). இவருக்கும் உசிலம்பட்டி பகுதியில் உள்ள சர்க்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

விஜயகுமார் போர்வெல் போடும் தொழில் செய்து வருகிறார். இதனால் அவர் அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால், தன்னுடைய தந்தை வீட்டில் சிவரஞ்சனி வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவரஞ்சனி வீட்டில் உள்ள உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.

போலீசார் விசாரணை

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவருடைய தந்தை குப்பம்பெருமாள் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். குடும்ப பிரச்சினை காரணமாக சிவரஞ்சனி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்