வேதாரண்யம் அருகே வேட்டைக்காரனிருப்பு தெற்கு சல்லிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். விவசாயி. இவருடைய மனைவி காந்திமதி (வயது54). இவர் நேற்று வீட்டில் இருந்தபோது காலில் கட்டு விரியன் பாம்பு கடித்து விட்டது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் காந்திமதி இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.