அய்யம்பேட்டையில் பிணமாக கிடந்த பெண்
அய்யம்பேட்டையில் பெண் பிணமாக கிடந்தார்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பாப்பா வாய்க்கால் அருகே 60 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி பசுபதி கோவில் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததுள்ளது. மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.