புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லையில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-23 20:54 GMT

நெல்லை டவுன் வையாபுரி நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவருடைய மனைவி அமுதா (வயது 19). காதலித்து வந்த இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் சரவணகுமார் அமுதாவிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். இதனால் மனமுடைந்த அமுதா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பு அமுதா எழுதியுள்ள கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அமுதாவுக்கு திருமணம் ஆகி 3 மாதங்களே ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் சேக்அயூப் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்