மதுவில் விஷம் கலந்து குடித்து கள்ளக்காதல் ேஜாடி தற்கொலை
மதுவில் விஷம் கலந்து குடித்து கள்ளக்காதல் ேஜாடி தற்கொலை
குண்டடம்
குண்டடம் அருகே கள்ளக்காதல் ேஜாடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள எருக்கலாம்பாளையத்ைத சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் 2 ேபருக்கும் திருமணமாகி விட்டது. அதே பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி மாரியம்மாள் (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருணமாக வில்லை.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடராஜன் இறந்து விட்டார். இந்த நிலையில் மணிகண்டனுக்கும், மாரியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அதன் பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர்.
இந்த விவகாரம் உறவினர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் இருவரையும் எச்சரித்துள்ளனர்.
தற்கொலை
இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் மணிகண்டனும், மாரியம்மாளும் திடீரென மாயமாகினர். அவர்களது குடும்பத்தினர் பல்ேவறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை குண்டடம் அருகே பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள காற்றாலை அருகே 2 பேரும் பிணமாக கிடந்தனர். அருகே காலி மதுபாட்டில், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் விஷப்பாட்டில் ஆகியவை கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உறவினர்கள் பிரித்து விடுவார்களோ என்ற பயத்திலும், அவமானத்தாலும் கள்ளக்காதலர்கள் மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
----