ஏரியை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை
ஏரியை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை
திருப்பூர்,
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊத்துக்குளி ஒன்றியம் செங்காளிபாளையம் பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
செங்காளிபாளையம் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். அண்ணா நகரில் ஏரி உள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் இந்த ஏரி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது எங்கள் ஏரிக்கு தண்ணீர் கிடைத்து விவசாயம் சிறக்கும் என்று நம்பிக்கையில் உள்ளோம். ஆனால் கடந்த ஒருவாரமாக தனிநபர் ஒருவர், தனது பட்டா நிலத்தில் ஏரி உள்ளதாக கூறி 1½ ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சேதப்படுத்திவிட்டார். எந்திரங்களால் மண்ணை அள்ளி கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விவசாயிகள் சென்று பணியை தடுத்து நிறுத்தினோம். அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தோம். எங்கள் ஊருக்கு ஒரு ஏரி மட்டுமே உள்ளது. தனிநபரிடம் இருந்து ஏரியை மீட்டு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் சீரமைத்துக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
--------------