வழிகாட்டி பலகை இல்லாததால் 3 கிமீ சுற்றி வாகனஓட்டிகள் அவதி

கிணத்துக்கடவுக்குள் செல்லும் சர்வீஸ் ரோட்டில் வழிகாட்டி பலகை இல்லாததால் 3 கி.மீ. சுற்றி வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர்

Update: 2022-06-05 16:09 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவுக்குள் செல்லும் சர்வீஸ் ரோட்டில் வழிகாட்டி பலகை இல்லாததால் 3 கி.மீ. சுற்றி வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

4 வழிச்சாலை

கோவை- பொள்ளாச்சி சாலை 4 வழிச்சாலையாக மாற்றப் பட்டு உள்ளது. இதில் ஏராளமான வாகனங்கள் சென்று வரு கின்றன. இதில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரும் வழியில் கோவில்பாளையம், தாமரைக்குளம், கோதவாடி பிரிவு, சொலவம்பாளையம் பிரிவு உள்ளிட்ட ஊர்கள் உள்ளன.

இந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 4 வழிச்சாலையில் இருந்து சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவை, பொள்ளாச்சியில் இருந்து வரும் பஸ்கள் அந்தந்த ஊருக்கு செல் லும் பயணிகளை சர்வீஸ் சாலையில் ஏற்றி இறக்கி செல்கின்றன.

3 கிலோ மீட்டர் தூரம்

பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு ஊருக்கு வரும் வழியில் கோதவாடிபிரிவு பகுதியில் கோயம்புத்தூருக்கு நேராகவும் கிணத்துக்கடவிற்கு சர்வீஸ்ரோட்டில் செல்லும் வகையில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் கிணத்துக்கடவிற்குள் செல்லும் சர்வீஸ்ரோடு அருகே வழிகாட்டி பலகை வைக்காமல் 50 மீட்டர் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டுனர்கள் கிணத்துக்கடவுக்குள் செல்ல வழி தெரியாமல் நேராக மேம்பாலத்தில் ஏறி 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி மீண்டும் கிணத்துக்கடவுக்கு திரும்பி வரும் நிலை உள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு குழப்பம்

இதில் பாலத்தில் இருந்து இறங்கியதும் மீண்டும் மேம்பாலம் ஏறி எதிர்திசையில் வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொள்ளாச்சியில் இருந்து வரும் 4 வழிச்சாலையில் கிணத்துக்கடவுக்கு பிரியும் சர்வீஸ் ரோட்டிற்கு முன்னதாகவே வழிகாட்டி பலகை வைக்க வேண்டும்.

இதனால் வெளியூர்களை சேர்ந்த வாகன ஓட்டிகள் குழப்பம் இன்றி கிணத்துக்கடவுக்குள் வந்து செல்ல வாய்ப்பு ஏற்படும்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

கோவை -பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் இருந்து எந்த ஊருக்கு சர்வீஸ் ரோடு பிரியும் இடத்திற்கு முன்னதாக வழிகாட்டி பலகை வைக்க வேண்டும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

வழிகாட்டி பலகை

ஆனால் 4 வழிச்சாலையில் கிணத்துக்கடவு சர்வீஸ் சாலை பிரிந்து இடத்தில் வழிகாட்டி பலகை இல்லாததால் 3 கிணத்துக் கடவு மேம்பாலத்தில் ஏறி இறங்கி 3 கிலோமீட்டர் சுற்றி மீண்டும் கிணத்துக்கடவு வர வேண்டிய நிலை உள்ளது.

இதை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சர்வீஸ் சாலை பிரிந்து செல்லும் பகுதிகளை ஆய்வு செய்து வழிகாட்டி பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்