உடுமலை
உடுமலை அருகே உள்ளது கணபதிபாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கடந்த ஒரு ஆண்டாக ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியும், அதை கண்டித்தும், முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் உடுமலை தாலுகா உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை தாலுகா உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தலைவர் எம்.ஈஸ்வரன் தலைமை தாங்கி பேசினார். பொதுச்செயலாளர் ஜி.செல்வராஜ் முன்னிலை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.