மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
வீ.மேட்டுப்பாளையம்
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா மேல் ஆணை கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி என்ற மனைவி உள்ளார்.
இவர் கோவையில் கட்டிட வேலை பார்த்துவிட்டு நேற்று காலை மோட்டார்சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கோவை-கரூர் சாலையில் ஓலப்பாளையம் கொழிஞ்சிகாட்டு வலசு பிரிவு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம், பக்கம் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.