மனைவியின் ஆபாச வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிய வாலிபர் கைது
மனைவியின் ஆபாச வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பியதோடு, சமூக வலைத்தளத்தில் வெளியிட போவதாக மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
காங்கயம்
மனைவியின் ஆபாச வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பியதோடு, சமூக வலைத்தளத்தில் வெளியிட போவதாக மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தம்பதி
வேலூர் மாவட்டம் அவல்கொண்டவை சேர்ந்தவர் அன்வர் அலி (வயது 35). இவர் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சக்திநகரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அன்வர் அலி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி காங்கயம் கடைவீதிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டபோது, ஐதராபாத் செல்வதாகவும் திரும்பி வருவதற்கு ஒரு வாரம் ஆகும் எனவும் கூறியுள்ளார்.
வாலிபர் கைது
ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் அவர் வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் முறையான பதில் சொல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி அன்வர் அலியின் சொந்த ஊரான அவல்கொண்டாவிற்கு உறவினர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வீட்டில் இருந்த அன்வர் அலி காங்கயம் வர மறுத்து விட்டார். இதனால் அவருடைய மனைவி மட்டும் காங்கயம் வந்தார்.
அதன் பின்பு மனைவிக்கு போன் செய்த அன்வர் அலி, நீ மட்டும் என்னோடு அவல் கொண்டாவிற்கு வர வேண்டும், இல்லை என்றால், நாம் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் மனைவியின் தம்பிக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல மனைவியுடன் ஒன்றாக இருந்த வீடியோவை உறவினர்கள் சிலருக்கும் அன்வர் அலி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்வர் அலியின் மனைவி காங்கயம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரித்து அன்வர் அலியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
------------