மேலூர்
மேலூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் குமரன் (வயது 40), சுரேஷ் (36). இவர்கள் இருவரும் வெள்ளலூர் அரசு பள்ளிக்கூடம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் குமரன் படுகாயம் அடைந்து இறந்தார். இந்த விபத்து குறித்து கீழவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.