லாரி மோதி கூலித்தொழிலாளி சாவு

கந்தம்பாளையம் அருகே லாரி மோதி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-10-14 19:00 GMT

கந்தம்பாளையம்

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள கீரம்பூர் குஞ்சாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராதிகா (33). அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று முருகன் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக திருச்செங்கோடு சென்றார். பின்னர் மீண்டும் அவரது ஊருக்கு குஞ்சாம்பாளையம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

மேல் சாத்தம்பூர் என்ற இடத்தில் வரும்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் தலையில் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் முருகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்