லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-08-25 20:25 GMT

சிவகாசி, 

சாத்தூர் மேலக்காந்திநகரை சேர்ந்தவர் கனகராஜ். இவர் கோவில்பட்டியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு மனைவி முருகேஸ்வரிக்கு போன் செய்து கோவில்பட்டியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக கூறி உள்ளார். பின்னர் அவர் கோவில்பட்டி-சாத்தூர் ரோட்டில் நள்ளிசத்திரம் அருகில் வந்தபோது, அந்த வழியாக சிமெண்டு மூடைகளை ஏற்றி வந்த லாரி கனகராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டி வந்த விருதுநகர் தாலுகா ஆவுடையாபுரத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் நாகராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்