மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி

வாணியம்பாடி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-10-02 17:45 GMT

வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் (வயது 22), ஐ.டி.ஐ. முடித்துவிட்டு கட்டிட வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வள்ளிப்பட்டு கிராமத்தில் இருந்து நண்பரை பார்ப்பதற்காக வாணியம்பாடிக்கு சின்னவேப்பம்பட்டு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது திருப்பத்தூர் - வாணியம்பாடி நெடுஞ்சாலையை கடக்கும்போது, அவர் மீது லாரி மோதியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வாணியம்பாடி தாலுகா போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்