மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது

குடிபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது

Update: 2023-04-16 18:45 GMT

மணல்மேடு:

மணல்மேடு அருகே உள்ள சின்ன இலுப்பப்பட்டு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 45) விவசாய தொழிலாளி.இவருடைய மனைவி கீதா. குமரவேல் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினையில் கீதாவை குமரவேல் திட்டி வீட்டில் இருந்த அரிவாளால் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது.வலிதாங்க முடியாத கீதா கூச்சலிட்டுள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் கீதாவை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரவேலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்