தொழிலாளி மீது தாக்குதல்
மணல்ேமடு அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
மணல்மேடு;
மணல்மேடு அடுத்த கொற்கை சாலை தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருடைய மகன் சுதாகர் (வயது39) கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முகிலன்(25) என்பவருக்கும் மது குடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கொற்கை பகுதியில் உள்ள ஒரு கடையில் சுதாகர் நின்று கொண்டிருந்தபோது முகிலன், சுதாகரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு முகிலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.