40 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை

40 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-05-24 20:28 GMT

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் முருக பிரசன்னா (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள இறைச்சி கடைகள், ரேஷன் கடைகள், கிடங்குகளில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டனர். அதில் எடை அளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து மறுமுத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 2 நிறுவனங்கள், சோதனை எடைகற்கள் வைத்திருக்காத 16 நிறுவனங்கள், மறுபரிசீலனை சான்று வெளிகாட்டி வைக்காத 14 நிறுவனங்கள் மற்றும் எடை குறைவாக விற்பனை செய்த 2 ரேஷன் கடைகள் மீது எடை அளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டமுறை எடையளவு பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் சிகரெட் லைட்டர், சுற்றுலா தளங்கள் மற்றும் சினிமா தியேட்டர்களில் விற்பனை செய்த பொட்டல பொருட்களில் தயாரிப்பாளர்களின் பெயர் மற்றும் முகவரி, தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியான தேதி, நிகர எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை போன்ற உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்த 2 நிறுவனங்கள், பதிவு சான்று பெறாமல் விற்பனை செய்த 4 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்