இருளில் மூழ்கிய கே.வி.குப்பம் பஸ் நிலையம்

கே.வி.குப்பம் பஸ்நிலையம் இருளில் மூழ்கியதால் பயணிகள் அவதியடைந்தனர்.;

Update: 2023-10-25 06:45 GMT

கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் இருந்து மேல்மாயில், வடுகந்தாங்கல், லத்தேரி, காட்பாடி, வேலூர், சித்தூர், குடியாத்தம், பேரணாம்பட்டு போன்ற ஊர்களுக்கு பயணிகள் சென்று வருகின்றனர்.

இரவு நேரங்களில் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் திருட்டு பயம் இல்லாமல் இருக்க உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை முதலே வானம் இருண்டு கிடந்தது. மேலும் உயர்கோபுர மின்விளக்கு எரியாததால் பஸ் நிலையம் இருளில் மூழ்கியது. இதனால் பஸ்நிலையத்திற்குள் எந்த பஸ் வருகிறது? எந்த பஸ் போகிறது? என்ற விவரம் தெரியாமல் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதாசரவணன் மின்சார தொழில் நுட்ப பணியாளர் உதவியுடன் வந்து மினிவிளக்கை பழுது பார்த்து சீரமைத்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் பஸ்நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு எரிந்தது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்