மண்டல பொதுக்குழு கூட்டம்

Update: 2023-05-09 16:42 GMT

திருப்பூர், மே.10-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் திருப்பூர் மண்டல பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மண்டல தலைவர் இன்பசேகரன் தலைமை தாங்கினார். மண்டல நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் குறித்து மாநில பொருளாளர் குணசேகரன் கூறும்போது, 'மின்வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது போல் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஒப்பந்த பணப்பலன்களை அமல்படுத்தவும், 90 மாதமாக நிலுவையில் உள்ள டி.ஏ. உயர்வுகளை வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்றார். மேற்கண்ட கோரிக்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்