காங்கயம் தி.மு.க ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுறவு சங்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன் தலைமை தாங்கினர். இதில் கணபதிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், படியூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம், காங்கயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிக அளவில் உறுப்பினர் சேர்த்தல் பணியை மேற்கொள்வது என தீர்மானிக்கபட்டது. இந்த நிகழ்சியில் கணபதிபாளையம், தம்மரெட்டிபாளையம், படியூர் மற்றும் பாலசமுத்திரம்புதூர் ஊராட்சியை சார்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.