உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவையொட்டி குட்டை திடல் ராட்டினங்கள் உட்பட கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவையொட்டி குட்டை திடல் ராட்டினங்கள் உட்பட கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது.
போடிப்பட்டி
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவையொட்டி குட்டை திடல் ராட்டினங்கள் உட்பட கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது.
கலை நிகழ்ச்சிகள்
உடுமலை மாரியம்மன் கோவில் நோன்பு சாட்டப்பட்டுள்ள நிலையில் வரும் 4-ந் தேதி இரவு 8.15-க்கு கம்பம் போடப்பட்டு திருவிழா கொண்டாட்டங்கள் தொடங்குகிறது. வரும் 5-ந் தேதி முதல் மாரியம்மன் கோவில் கலையரங்கில் இன்னிசை நிகழ்ச்சிகளும், 7-ந் தேதி முதல் குட்டை திடலில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. உடுமலை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மட்டுமல்லாமல் உறவுகளையெல்லாம் 'எங்க ஊரு மாரியம்மன் தேர்த்திருவிழாவுக்கு வாருங்கள்'என்று விரும்பி அழைப்பதால் நெடுந்தொலைவிலிருந்தும் மக்கள் உடுமலையில் ஒன்று திரள்வார்கள்.
குறிப்பாக வரும் 13-ந் தேதி மாலை 4.15 மணிக்கு நடைபெறவுள்ள தேர்த்திருவிழாவைக் காண ஏராளமான மக்கள் வருவார்கள். . இந்தநிலையில் திருவிழாவுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்காக வருவாய்த்துறை மூலம் ரூ. 65 லட்சத்து 40 ஆயிரத்துக்கு குட்டை திடல் ஏலம் விடப்பட்டுள்ளது. வாணியம்பாடியைச் சேர்ந்த மோகன் என்பவர் ஏலம் எடுத்துள்ள நிலையில், தற்போது குட்டை திடலில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறுவுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கட்டணம்
பிரமிக்க வைக்கும் பிரம்மாண்டமான ராட்டினங்கள், குழந்தை விளையாட்டு சாதனங்கள், மரணக் கிணறு உள்ளிட்ட பல சாகச விளையாட்டுகளுடன் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும் அமைய உள்ளது. அத்துடன் டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, ஜிகர்தண்டா, பஞ்சு மிட்டாய் உள்ளிட்ட நாவுக்கு சுவையூட்டும் ஏராளமான கடைகளும் அமைய உள்ளன. மேலும் காதணிகள் முதல் காலணிகள் வரை பலவிதமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் இங்கே அமைய உள்ளது. அவற்றுக்கான ஆயத்தப்பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
எல்லாம் சரி தான்...கட்டணம் எவ்வளவு வைக்கறீங்க..!! கட்டண விஷயத்தில் கருணை காட்டினால் தான் திருவிழா கொண்டாட்டங்களை முழுவதுமாக குடும்பத்தோடு அனுபவிக்க முடியும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.நெருங்கி விட்ட திருவிழாவின் அடையாளமாக தற்போது உடுமலை நகரம் முழுவதும் ஆங்காங்கே விளம்பர பதாகைகளுடன் களை கட்டியுள்ளது.