குருந்தடி அய்யனார் கோவில் திருவிழா

உதயமார்த்தாண்டபுரம் குருந்தடி அய்யனார் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-08-22 18:45 GMT

தில்லைவிளாகம்:

முத்துப்பேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரம் பூர்ணா புஷ்கலா அம்பிகா சமேத குருந்தடி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாதம் திங்கட்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு பூர்ணா புஷ்கலா அம்பிகா சமேத குருந்தடி அய்யனாருக்கு மஞ்சள், இளநீர், சந்தனம், தேன், சர்க்கரை உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குதிரை எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்