காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
திருக்குறுங்குடி பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்- பயிர்கள் சேதம்
ஏர்வாடி:
திருக்குறுங்குடி வடகரை பத்துகாட்டில் கடந்த 1 வாரமாக காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வாழைகள், தக்காளி, மிளகு, சோளம் போன்ற பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதை அறிந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அட்டகாசம் செய்து வரும் காட்டுப் பன்றிகளை விரட்டவும், நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.