காட்டுப்பன்றி குறுக்கே ஓடியதால் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விவசாயி சாவு

கீழே விழுந்த விவசாயி சாவு

Update: 2022-08-30 15:10 GMT

காட்டுப்பன்றி குறுக்கே ஓடியதால் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விவசாயி இறந்தார்.

காட்டுப்பன்றி குறுக்கே ஓடியது

டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் அண்ணமார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகனரங்கம் (வயது 58). விவசாயி. இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

சம்பவத்தன்று மோகனரங்கம் கொங்கர்பாளையம் சமனாக்காடு பகுதியில் மாட்டில் பால் கறப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றார். வாணிப்புத்தூர் ஆயாத்தோட்டம் வழியாக வாய்க்கால் கரையை ஒட்டிய சாலையில் சென்றபோது, திடீரென காட்டுப்பன்றி ஒன்று குறுக்கே ஓடியது. அப்போது அவர் மோட்டார்சைக்கிளில் பிரேக் போட்டு உள்ளார். இதில் அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதனால் படுகாயம் அடைந்தார்.

சாவு

இதைக்கண்டதும் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மோகனரங்கம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்