2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Update: 2023-06-14 16:35 GMT


திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஷெரீப்காலனியை சேர்ந்த சிலம்பரசன் (வயது 38), திருநெல்வேலி பேய்குளத்தை சேர்ந்த முருகன் (31) ஆகியோர் கவுதம் என்பவருடன் தகராறில் ஈடுபட்டு கொலைமிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக தெற்கு போலீசார் கடந்த மாதம் 27-ந் தேதி 2 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார். அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள சிலம்பரசன், முருகன் ஆகியோரிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 26 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

மேலும் செய்திகள்