பெரிய கருப்பையா கோவில் கும்பாபிஷேகம்

பெரிய கருப்பையா கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-09-03 18:45 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே ஆரணிபட்டியில் பெரிய கருப்பையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கணபதி பூஜை, கோ பூஜையுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து பல்வேறு வகையான யாகவேள்விகள் நடத்தப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்