கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்ட முன்னேற்பாடுகள்

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்ட முன்னேற்பாடுகள்

Update: 2023-05-03 20:07 GMT

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்ட முன்னேற்பாடுகளை அன்பழகன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சாரங்கபாணி

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி பெருமாள் கோவில் உள்ளது. புகழ்பெற்ற வைணவ தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த 3-வது மிகப்பெரிய கோவிலாகும். பல்வேறு சிறப்புகளை கொண்டது சாரங்கபாணி பெருமாள் கோவில்.

இக்கோவிலின் சித்திரை தேர் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவில் தேர், திருவாரூர் தியாகராஜ சாமி கோவில் ஆழித்தேருக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் உள்ளது. இந்த தேர் 110 அடி உயரமும், 500 டன் எடையும் உள்ளது.

அன்பழகன் எம்.எல்.ஏ. ஆய்வு

இத்தகைய சிறப்பு பெற்ற சாரங்கபாணி கோவில் தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தேரோடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தேர் விரைவாக நிலையை வந்து அடைவதற்கு தேவையான வழிமுறைகள் ஆகிய முன்னேற்பாடுகள் குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப தமிழழகன், மாமன்ற உறுப்பினர் சந்தோஷ் குமார் துணை செயலாளர் ப்ரீயம் சசிதரன், செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், சாரங்கபாணி கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்