நெல்லியங்கோதை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நென்மேனி கிராமத்தில் நெல்லியங்கோதை அம்மன்-வன்மீகநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2023-10-20 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அருகே நென்மேனி கிராமத்தில் உள்ள நெல்லியங்கோதை அம்மன்-வன்மீகநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் முதற்கால யாக பூஜை, இரண்டாம் காலை யாக பூஜை தொடங்கி சிறப்பு வழிபாடுகள், பூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் பூஜிக்கப்பட்டிருந்த புனிதநீர் அடங்கிய குடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்த சிவாச்சாரியார்கள் அதன் பின்னர் கோவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்