குதிரைமலையான் கோவில் கும்பாபிஷேகம்

குதிரைமலையான் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-09-01 14:54 GMT


ராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டிணத்தில் அமைந்து உள்ளது புகழ்வாய்ந்த குதிரைமலையான் கருப்பணசாமி மற்றும் சத்தீஸ்வரி கன்னிமார்கள் கோவில். இந்த கோவில் கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. யாகசாைல பூஜை முடிந்து நேற்று காலை 8 மணி அளவில் விக்னேசுவர பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து பூதசுத்தி, தனபூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீர் கலசங்கள் அடங்கிய யாத்ராதானம், கடம்புறப்பாடு நிகழ்வு நடந்தது. காலை 11 மணி அளவில் வானில் கருடன் வட்டமிட வேத விற்பன் னர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசங்களில் இருந்த புனித நீர் கோவில் கும்பத்தில் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து குதிரை மலையான் கருப்பண சாமி மற்றும் சத்தீஸ்வரி கன்னிமார்கள், லாடசாமி, பால கணபதி, பாலமுருகன் ஆகியோருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி ஆலய தலவரலாறு புத்தகம் வெளியிடப் பட்டது. ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர். விழாவையொட்டி திருப்புல்லாணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்