விக்கிரவாண்டிஅங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்
விக்கிரவாண்டி அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி கடைவீதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. பருவத ராஜகுல பொதுமக்கள் சார்பில் கோவில் திருப்பணிகள் மற்றும் புதிதாக பெரியாயி அம்மன் கோவில் கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
விழாவில் நேற்று காலை 9.15 மணிக்கு பூர்ணாகுதி, 4-ம் காலை யாக சாலை பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு யாக சாலையில் இருந்து கடம்புறப்படாகி, கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். யாகசாலை பூஜையை மோகன சுந்தர சிவம் தலைமையில் திவாகர், பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் குருக்கள் செய்திருந்தனர்.
விழாவில் விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் மற்றும் பருவத ராஜகுல தர்மகர்த்தாக்கள், நாட்டாண்மைகள், கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.