மின்னக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா
வெண்ணந்தூர் அருகே மின்னக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.;
வெண்ணந்தூர்
வெண்ணந்தூர் ஒன்றியம் மின்னக்கல் கிராமம், வாய்க்கால் பட்டறையில் அமைந்துள்ள மகா கணபதி, மாரியம்மன், அம்மன், முனியப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி கிராம சாந்தி, தீர்த்தக்குட ஊர்வலம், முதல்கால யாகபூஜை, திருமுறை பாராயணம், 2-ம் கால பூஜை, கோபுர கலசம் வைத்தல், நாடி சந்தனம், கடம் புறப்பாடு ஆகியவை ஆகம முறைப்படி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த நேற்று முன்தினம் காலை முதலில் விமானங்களுக்கும், அதனைத்தொடர்ந்து மகா கணபதி, மாரியம்மன், அம்மன், முனியப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிவ காம முறைப்படி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.