புளியங்குளம் ராமசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

புளியங்குளம் ராமசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-06-24 14:46 GMT

சாத்தான்குளம்:

பேய்க்குளம் அருகே புளியங்குளம் ராமசுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலையில் கும்பம் எழுந்தருளல் நடந்தது. காலை 9 மணியளவில் விமான கும்பாபிஷேகம், பிரதான மூர்த்தி பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், மகாஅபிஷேக கும்ப பூஜை ஜெபம், 21 திரவியங்களால் மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்