ஆண்டிப்பட்டி அருகே சூளை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்
ஆண்டிப்பட்டி அருகே சூளை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
ஆண்டிப்பட்டி அருகே கன்னியப்ப பிள்ளைபட்டியில் சூளை கருப்பசாமி, மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தது.
இதையடுத்து இன்று பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சூளை கருப்பசாமி மற்றும் பரிவார குதிரைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.