சுடலைமாட சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
சுத்தமல்லி சுடலைமாட சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுத்தமல்லி கொடிமரத்து சுடலைமாட சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 1-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், பிரம்மச்சாரிய பூஜை, தீபலட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு ஹோமம், சுதர்சன ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், கோபூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, தன பூஜை, மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜை, சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.
1-ந் தேி (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், நாடிசந்தானமும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடக்கிறது. காலை 9.20 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடிமரத்து சுடலைமாட சுவாமி மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. பகல் 11.50 மணிக்கு மகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடக்கிறது.