செங்கமலையார் கோவில் கும்பாபிஷேகம்

செங்கமலையார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-09-12 18:21 GMT

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள மகா கணபதி, செங்கமலையார், ஆஞ்சநேயர் ஆகிய புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று விநாயகர் பூஜை, சூரிய பூஜை, கோ பூஜை, பிம்பசுத்தி உள்ளிட்ட நான்குகால பூஜைகளும் நடத்தப்பட்டு மகா கணபதி, செங்கமலையார், ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சன்னாவூர், கோவில்எசனை, இலங்தைகூடம் உள்ளிட்ட சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்