பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி அருகே பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-01-27 19:15 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி சுக்காம்பட்டி சாலையில் முத்தையா நகர் காலனியில் ஸ்ரீபிடாரி அம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கும்பங்களை சுமந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர். அதனை தொடர்ந்து மூலவர் பிடாரி அம்மன் மற்றும் விநாயகர், சின்ன கருப்பர், முனியன்சாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மூலவர் பிடாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகள் முத்தையா நகர் காலனி மக்கள் மற்றும் திருப்பணி குழுவினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்