மரக்காணம்முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்:தொல்.திருமாவளவன் எம்.பி. நடத்தி வைத்தார்

மரக்காணம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை தொல்.திருமாவளவன் எம்.பி. நடத்தி வைத்தார்.

Update: 2023-08-27 18:45 GMT


மரக்காணம், 

மரக்காணத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 25-ந்தேதி முதல் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று காலை யாக சாலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு, கோவில் விமான கலசம் அமைந்துள்ள இடத்துக்கு புனித நீர் அடங்கிய கலசத்தை எடுத்து சென்றார். பின்னர், விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்