இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
இட்டமொழி அருகே இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
இட்டமொழி:
இட்டமொழி அருகே உள்ள சங்கனாங்குளம் முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் மங்கள இசை, மகா கணபதி ஹோமம், கோபூஜை, தீர்த்தம் எடுத்து வருதல், முதல் யாகசாலை பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2-ஆம் நாள் 2-ம் கால, 3-ம் கால யாகசாலை பூஜைகள், மருந்து சாத்துதல், யந்திர ஸ்தாபனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 3-ஆம் நாள் 4-ம் கால யாகசாலை பூஜைகள் விமான கும்பாபிஷேகம், இசக்கியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து தீபாராதனை, அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.