பிரம்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கார்குடல் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
விருத்தாசலம்
விருத்தாசலம் அடுத்த கார்குடலில் ஸ்ரீ அபிராமி அம்மை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து நாளை (புதன்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வரலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை ஆகியவை நடைபெற்று, மணிமுக்தாற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து மாலையில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதல் கால யாக பூஜை நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 2-ம் கால யாக பூஜை, மாலை 3-ம் கால யாக பூஜைகள் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெறும். அதனை தொடர்ந்து நாளை காலை 4-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், யாத்திரதானம் நடைபெற்று, காலை 9:30 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை வலம் வந்து விமான கோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.