இளையான்குடி அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

இளையான்குடி அருகே அய்யனார்கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-03 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி அருகே அய்யனார்கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அய்யனார் கோவில்

இளையான்குடி அருகே ஆக்கவயல் கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூர்ணகலா, புஷ்கலா சமேத அடைக்கலம் காத்த அய்யனார், குருந்தடி காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன.

இந்த கோவிலில் திருப்பணிகள் பல நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் ெதாடங்கியது. யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேகம்

யாக சாலை பூஜைகள் முடிந்ததும் அங்கிருந்து புனித தீர்த்தக்குடங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதன்பின்னர் விமான கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தக்குடங்கள் எடுத்து செல்லப்பட்டன.

பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருவெற்றியூர் மணிகண்ட குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றினர். சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில் ஆக்கவயல், சூராணம், அளவிடங்கான், கலங்காதான்கோட்டை, கல்லடி திடல், வண்டல், விசவனூர், நானாமடை, பாப்பாமடை, உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர் பந்தல், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆக்கவயல் கிராமத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்