மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

Update: 2022-12-02 18:45 GMT

நெகமம்

செட்டியக்காபாளையம் மாகாளியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கோபுரம் மற்றும் முன் மண்டபம் கட்டப்பட்டது.அங்கு விநாயகர், முருகன், மாகாளியம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையொட்டி கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, ஆனைந்து வழிபாடு, புனிதநீர் கலச வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, இரவு 7 மணிக்கு இறைசக்திகளை பாலாலயத்தில் இருந்து எழுந்தருள செய்து யாகசாலை பிரவேசம் செய்தல் ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 8 மணிக்கு பாவனா அபிஷேகம், மாலை 3 மணிக்கு அம்மனின் கரிக்கோல ஊர்வலம், 5 மணிக்கு விமான கலசம் நிறுவுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதையடுத்து நேற்று காலை 7 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலாவை தொடர்ந்து கும்பாபிஷேக பெருவிழா நடந்தது. அதன்பிறகு அன்னதானம், மகா அபிஷேகம், தசதரிசனம், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்