கும்பாபிஷேக விழா
திருப்பத்தூர் அருகே உள்ள பரியாமருதுபட்டி பரியமருந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள பரியாமருதுபட்டி பரியமருந்தீஸ்வரர் கோவில்திருப்பத்தூர் அருகே உள்ள பரியாமருதுபட்டி பரியமருந்தீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் 1955-ம் ஆண்டு சீர்திருத்தி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்பு 68 ஆண்டுகளுக்கு பிறகு பரியாமருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 1-ந்தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலியுடன் பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின் கடம் புறப்பாடு நடைபெற்றது. கோவிலை சுற்றி வலம் வந்த புனிதநீர் கலசங்கள் விமானத்தை வந்தடைந்தது. அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. 68 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் சுற்று வட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.