நரம்பு சிலந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மோகனூர் அருகே நரம்பு சிலந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மோகனூர்
மோகனூர் ஒன்றியம், ராசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு சீத்தப்பட்டியில், நரம்பு சிலந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் நடந்தது. கடந்த 2-ந் தேதி மகா கணபதி, கிராம சாந்தி பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம் எடுத்தல், கோபுர கலசம் வைத்தல், முதல், 2-ம் கால யாக வேள்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 4-ந் தேதி காலை வாஸ்து பூஜை, மகா தீபாராதனை, கடம் புறப்பாடும், இதையடுத்து மகா கணபதி, நரம்பு சிலந்தி மாரியம்மன், பகவதியம்மன் கோவில் கோபுரங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. அதையடுத்து மகா அபிேஷகம், சாமி தரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி கொங்கு ஒயிலாட்டம், ஈசன் வள்ளி கும்மி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.