எல்லம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா
கல்லுகுறுக்கி எல்லம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி அடுத்த கல்லுகுறுக்கி கிராமத்தில் உள்ள சக்தி விநாயகர், பாலமுருக கந்தவேலன், எல்லம்மாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த, 28-ந் தேதி வேதபாராயணம், கணபதி பூஜை, மஹா சங்கல்பம், சுத்தி புண்ணியாகவாசனம், கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், ருத்ர ஹோமம் மற்றும் முதல்கால யாக பூஜை ஆகியவை நடந்தன. நேற்று காலை, 4-ம் கால யாகபூஜை, கணபதி மூல மந்திர ஹோமம், பாலமுருக கந்த வேலனுக்கு மூலமந்திர ஹோமம், அம்மன் மூலமந்திர ஹோமம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடு, கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம், மூலவர்களான, சக்தி விநாயகர், பாலமுருக கந்த வேலன், எல்லம்மனுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லுகுறுக்கி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.