முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

மாதேமங்கலத்தில் முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.;

Update: 2022-07-31 16:33 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலம் கிராமத்தில் புள்ளகுட்டி முனியப்பன்-முனியம்மா கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி முளைப்பாரி மற்றும் பால்குடம் ஊர்வலம், கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்தகுடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முனியப்பன்-முனியம்மா மற்றும் மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை புரோகிதர்கள் நடத்தி வைத்தனர். பின்னர் சாமிக்கு அபிஷேக, ஆராதனை,அலங்கார சேவை, மகா தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்