எச்.கோபிநாதம்பட்டியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா எடப்பாடி பழனிசாமி முன்னின்று நடத்தி வைத்தார்
எச்.கோபிநாதம்பட்டியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை எடப்பாடி பழனிசாமி முன்னின்று நடத்தி வைத்தார்.
அரூர்:
எச்.கோபிநாதம்பட்டியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை எடப்பாடி பழனிசாமி முன்னின்று நடத்தி வைத்தார்.
ராமர் கோவில்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே எச்.கோபிநாதம்பட்டி கிராமத்தில் ராமர் நகரில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.
எம்.எல்.ஏ.க்கள் கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், அ.தி.மு.க. விவசாய அணி மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாநில அமைப்பு செயலாளர் சிங்காரம், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவப்பு கம்பள வரவேற்பு
விழாவுக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு யானைகள், குதிரைகள் அணிவகுக்க மேளதாளங்கள் முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் யாகசாலையில் இருந்து புனிதநீர் மேளதாளங்கள் முழங்க கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது.
இந்த விழாவில் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், அரூர் நகர செயலாளர் பாபு என்கிற அறிவழகன், ஏ.ஆர்.எஸ்.எஸ். என்டர்பிரைசஸ் சக்தி, பரத், ஒன்றிய செயலாளர்கள், மதிவாணன், பசுபதி, விஸ்வநாதன், சேகர், ராஜா, தென்னரசு, மாவட்ட ஊராட்சி தலைவர் யசோதா மதிவாணன், ஒன்றிய குழு தலைவர் பொன்மலர் பசுபதி, மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பெரிய கண்ணு, ஒன்றிய குழு உறுப்பினர் சதாசிவம், ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கலந்து கொண்டனர்.
விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.