தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்

தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-10-12 18:36 GMT

சென்னை,

வணிக வரிகள் ஆணையர் தீரஜ்குமார், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக் கல்வித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அவர் நிதித்துறை செயலாளராக (செலவினங்கள்) முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

சுற்றுலாத்துறை

பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சுற்றுலாத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராகவும் செயல்படுவார்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.

சுற்றுலா இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்