குலேசகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பார்வதி திருக்கோலத்தில்முத்தாரம்மன் வீதி உலா

குலேசகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா நடந்தது.

Update: 2023-10-17 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் முத்தாரம்மன் கற்பக விருச்சிக வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்தக் கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளர்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மூன்றாம் நாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை கலையரங்கத்தில் சமய சொற்பொழிவும், இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்