குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு27 டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடல்
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு 27 டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.;
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு வருகிற 24, 25-ந் தேதிகளில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி குலசேகரன்பட்டினம் மற்றம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 27 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. அன்றைய தினம் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளதால், மதுபான விற்பனை ஏதும் நடைபெறக் கூடாது.
அன்றைய தினம் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.